Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களின் உடலமைப்பு 36-24-36! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நடத்தப்படும் சர்ச்சை பாடம்

பெண்களின் உடலமைப்பு குறித்து கீழான கருத்துகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடமாக நடத்தப்படுகிறது. பெண்களின் உடல் அளவுகளில் இதுதான் சிறந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் கண்டனங்களை சந்தித்து வருகிறது.

cbse


தனியார் பதிப்பகத்தின் புத்தகம் ஒன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ’உடல்நலமும் உடற்பயிற்சியும்’ என்ற புத்தகத்தில் பெண்களின் உடல் அமைப்பு குறித்து கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல கண்டனங்களையும் சந்தித்து வருகிறது.


’’36-24-36’ இந்த அளவுகளில் தான் பெண்களின் உடலமைப்பு இருக்க வேண்டும். இதுதான் சிறந்தது. இந்த அளவீடுகளில் தான் உலக அழகிகளே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்’ என சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெண்கள் குறித்த தவறான பார்வையை மாணவர்களுக்கு வழங்குவதாகும் எனப் பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.


மேலும், ஆண்களில் சிறந்தவர் ‘V' வடிவில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாதிரியான ஒரு தவறுதலான பார்வையை மாணவர்களிடம் ஒரு தேசிய பள்ளியில் பாடத்திட்டமாகக் கொடுப்பதா என பாடநூல் திட்டம் மீதும் அந்தப் புத்தக ஆசிரியர் மீதும் பல கண்டனங்கள் பதியப்பட்டு வருகின்றன.
 

நன்றி : The Newsminute

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close