Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகள்!

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், டெல்லி சென்று, பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர். அவரோடு ஃபோட்டோவும் எடுத்துக்கொண்டனர். இதுபற்றி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற பஞ்சாயத்துப் பிரதிநிதிகளுக்கு, டெல்லியில் விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள, நம் தமிழகப் பிரதிநிதிகள் குடும்பத்துடன் டெல்லி வந்திருந்தனர். 

Modi

நரேந்திர மோடியின்  ஆளுமையைக் கண்டு நாங்கள் வியந்திருக்கிறோம். அவரை நேரில் சந்தித்து, எங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே, பிரதமரைச் சந்திக்க எங்களுக்கு நேரம் கேட்டுத் தரவேண்டும் என்றும், பாராளுமன்றத்தைக் காணவும் அனுமதி பெற்றுத்தர வேண்டும் எனவும் என்னிடம் சில நாள்கள் முன் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, பாராளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில், பாராளுமன்றத்தைச் சுற்றிப்பார்க்க அனுமதி வாங்கித்தந்தோம். அதேபோல அவர்களுக்கு ஆச்சர்யம் தரும் வகையில், மோடி முற்பகல் 11-30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்தார். அதன்படி, முற்பகலில் தமிழக முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

நரேந்திர மோடி அவர்களைக் கண்டவுடன், 'வணக்கம்' என்று சொன்னார். பிறகு, ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டார்  அவர்களுடன் வந்திருந்த சிறுவர், சிறுமியர்களை வாஞ்சையுடன் அழைத்து, அவர்களிடம் என்ன வகுப்பு படிக்கிறீர்கள்? பிற்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்? என ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்ததுடன், அவர்களின் இலக்கை அடைய தனது வாழ்த்துக்களைத் தமிழில் தெரிவித்தார்.

பிரதமரைச் சந்தித்தது தங்களது பாக்கியம் என தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்தனர்'' என்று சொன்னார்.

-எஸ்.முத்துகிருஷ்ணன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close