Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்பை வீழ்த்தி இன்ஸ்டாகிராமின் அரசர் ஆனார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இன்ஸ்டாகிராமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார்.

Instagram modi


புகைப்படங்களை பகிர உதவும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்,  அதிகமானோர் பின்தொடரும் உலகத் தலைவர்களின் கணக்குகளைக்கொண்டு, ’பர்சன் மார்ஸ்டெல்லர்ஸ்’ என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில்,  325 உலகத் தலைவர்களின் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வு முடிவில்,  உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் தலைவர் பிரதமர் மோடிதான் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலக மக்கள் அதிகம் பின்தொடரும் தலைவர்கள் பட்டியலில் மோடி முதல் இடத்திலும், ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், போப் ஆண்டவர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் தன்னை இணைத்துக்கொண்டார்.  தற்போது, மோடியை 6.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். டொனால்ட் ட்ரம்ப்பை 6.4 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இதுவரை 53 புகைப்படங்களே பகிரப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகைப்படத்துக்கும் குறைந்தபட்சம் 2,23,000 லைக்குகள் வந்துள்ளன.

இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இணையத்தில் ஒரு தரப்பினர், ‘பாரதப் பிரதமர் உலக அளவில் அனைவராலும் பின் தொடரப்படுகிறார்’ என்று மோடியைப் பாராட்டி வந்தாலும், ‘நாட்டு மக்களின் நலனைவிட சமூக வலைதளங்களில் பிரபலமாவதில்தான் மோடி அதிக கவனம் செலுத்துகிறார்’ என்று மற்றொரு தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close