Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உ.பி-யைத் தொடர்ந்து ஹரியானாவில் ‘ஆபரேஷன் துர்கா’

பெண்களைக் கேலிசெய்வோர், துன்புறுத்துவோருக்கு எதிராக, தற்போது ஹரியானாவில் ‘ஆபரேஷன் துர்கா’ செயல்படத் துவங்கியுள்ளது.

ஹரியானா

 

பெண்களின் பாதுகாப்புக்காக ஹரியானாவில், ‘ஆபரேஷன் துர்கா’ என்ற போலீஸ் படை நேற்று முதல் செயல்படத் துவங்கியது. பெண்களைக் கேலிசெய்வோர், துன்புறுத்துவோர் என ‘ஈவ் டீசிங்’ செயலில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவே, இந்த ‘ஆபரேஷன் துர்கா’ துவங்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில், நேற்று நடந்த ஆபரேஷனில் மட்டும் 72 பேர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். ஹரியானாவில் உள்ள முக்கியமான பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி-கல்லூரிகள் என அத்தனை இடங்களிலும் ‘ஆபரேஷன் துர்கா’ போலீஸார் கண்காணிப்பாளர்கள் என ஹரியானா முதல்வர் மனோஹர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில், பெண்களைக் கேலிசெய்வோர், பின்தொடர்வோரிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க, ‘ஆன்டி- ரோமியோ’ போலீஸ் படை செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close