Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்! ஜூலை 1-ம் தேதி முதல் அமல்

ஜி.எஸ்.டி தொடர்பான நான்கு துணை மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். ஜூலை 1-ம் தேதி முதல் "ஜி.எஸ்.டி" என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரவுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டில் ஜிஎஸ்டி மசோதா ஐக்கிய முற்போக்கு அரசால் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த மசோதா சில காரணங்களால் நிறைவேற்றமுடியவில்லை.

அதன்பின்னர் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்தது. இருப்பினும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால் மாநிலங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநில அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில், ஜி.எஸ்.டி மசோதாவில் சில திருத்தங்கள் மற்ற மாநிலங்களால் முன் மொழியப்பட்டன.

இதனையடுத்து, ஜி.எஸ்.டி மசோதா கடந்த மார்ச் 29-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஏப்ரல் 6-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இரண்டு அவைகளிலும் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்பட்டது. இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close