Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வில் ‘உருது’- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில் ‘உருது’ மொழியை சேர்த்துக்கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறை 2018-ல் இருந்து பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

neet

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் உருது மொழியையும் சேர்த்துக்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்விகார் சாந்தன்கவுடார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வுகளை உருது மொழியிலும் எழுத அனுமதிக்க வேண்டும். அதேநேரத்தில் 2018-ம் ஆண்டில் இருந்துதான் உருது மொழிப் பயன்பாடு சேர்த்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், 2017 நீட் தேர்வுகளுக்கு இன்னும் ஒருமாத காலமே இருப்பதால் மத்திய அரசை நிர்பந்திக்கக்கூடாது எனத் தெரிவித்தனர்.

தற்போது, நீட் தேர்வுகள் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, அசாம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய பத்து மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close