Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் தலைமை நீதிபதி ஆஜராக வேண்டும்- நீதிபதி கர்ணன் உத்தரவு!

இந்தியாவின் தலைமை நீதிபதி உட்பட 6 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் நேரில் ஆஜராகவும், அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கர்ணன்

உச்சநீதிமன்ற நீதிபதிகளால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட கொல்கத்தா நீதிபதி கர்ணன், அந்த ஏழு நீதிபதிகளையும் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி காலை 11.30 மணி அளவில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் ஏழு பேரும் அவர்களது பாஸ்போர்ட்டினை 15 நாள்களுக்குள் டெல்லி போலீஸ் இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் சம்மன் கிடைக்கப்பெற்றவர் நீதிபதி கர்ணன். பதவியில் இருக்கும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியினை ஆஜராக சொல்வதற்கு உச்சநீதிமன்றத்துக்கு உரிமையில்லை என மறுத்தவர். 

தற்போது, ‘தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டம்’ பிரிவில் சட்டத்தை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி கர்ணன்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close