Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் பாஸ்போர்ட் குறித்து பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

PM Modi

'பெண்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டாம். தாய் அல்லது தந்தை பெயரை பாஸ்போர்ட்டில் பயன்படுத்துவது குறித்து அவர்களே முடிவெடுக்கலாம்' என்று தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி. 

மேலும், பெண்களுக்காக அவர் தலைமையிலான அரசு தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசுகையில், 'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு 6,000 ரூபாயை பரிமாற்றம் செய்யும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது' என்று பேசினார்.

சிலிண்டர் மானியத்தை தானாக முன் வந்து விட்டுக் கொடுக்கும் திட்டத்தைப் பற்றி மோடி, 'இதுவரை 1.2 கோடி பேர் சிலிண்டருக்குக் கொடுக்கும் மானியத்தை தானாக முன் வந்து விட்டுக் கொடுத்துள்ளனர்' என்று கூறியுள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close