Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கத்திக்குத்தில் இருந்து எஜமானியை காப்பாற்றி உயிர்துறந்த நாய்

மும்பையில் எஜமானியை ஒருவர் கத்தியால் குத்தியபோது, குறுக்கே பாய்ந்த வளர்ப்பு நாய், அவரை காப்பாற்றிவிட்டு உயிர் துறந்தது.

ஆன்டோப் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் சுமிதி. இவர் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த பப்பி ஒன்றை 'லவ்லி' என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வந்தார்.  கடந்த 9-ம் தேதியன்று சுமிதியின் பக்கத்து வீட்டில் வசித்த இளம்பெண்களுக்கும் வெங்கடேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடேஷ், ரோஸி என்பவரைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய ரோஸி, சுமிதியிடம் அடைக்கலம் புகுந்துள்ளார்.

ரோஸியை கத்தியால் குத்த வந்த வெங்கடேஷை சுமிதி தடுக்க முயல, கோபமடைந்த வெங்கடேஷ், அவரைக் கத்தியால் குத்தினார். அப்போது, லவ்லி குறுக்கே பாய்ந்தது.. சம்பவத்தில் கத்திக் குத்துப்பட்ட லவ்லி, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானது. வெங்கடேஷ் தப்பி ஓடி விட்டார். கத்திக்குக்கு பலியான செல்லநாயை பார்த்துக் கதறி அழுத சுமிதிக்கு ஆறுதல் கூறி தேற்ற வழியில்லாமல் அக்கம் பக்கத்தினர் தவித்தனர்..

சுமிதியின் தாயார் அண்மையில் இறந்துள்ளார். சுமிதிக்கு லவ்லிதான் பாதுகாப்பாக இருந்துள்ளது. 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close