Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீட்டுக்கு தடை - யோகியின் பகீர் முடிவு

உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

அவருடைய அறிவிப்புகள் பல்வேறு சர்ச்சைகளையும் அதிருப்திகளையும் உருவாக்கி வருகிறது. மாட்டிறைச்சிக்குத் தடை மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக கூறப்படும் 'ரோமியோ ஸ்கோட்' போன்ற செயல்பாடுகள் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கின. தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி உள்ளிட்ட பிரிவுகளுக்கு இருந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு ரத்து முறை என்பது உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவால் திட்டமிடப்பட்ட ஒன்று ஆகும். அதனைத் தற்போது யோகி செயல்படுத்தியுள்ளார். ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் யோகா மற்றும் தற்காப்புக் கலைகளை யோகி ஆதித்யநாத் அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close