Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேள்வித் தாளை அச்சடிக்க மறந்த பல்கலைக் கழகம்... அதிர்ச்சியடைந்த மாணவர்கள்!

பீகாரில் கேள்வித் தாள்கள் லீக் ஆகும். இல்லையென்றால், மாணவர்கள் காப்பியடிக்க பெற்றோர்களே உதவி புரிவார்கள். இப்படியெல்லாம்தான் இதுவரைக் கேள்விப்பட்டுள்ளோம்.

இப்போது, அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகல்பூர் என்ற நகரில் தில்கா மன்ஜிகி பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு, முதுகலை பட்டப் படிப்புக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஹிந்தி மொழித் தேர்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. 94 மாணவர்கள் தேர்வு எழுத இருந்தனர். 

ஆனால், கடைசிக் கட்டத்தில்தான் ஹிந்தி மொழித்தேர்வுக்கான கேள்வித்தாளே அச்சடிக்கப்படவில்லை என்கிற விவரம் தெரிய வந்தது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மறுதேர்வுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் ஹிந்தி மொழித்துறைத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close