Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத் கலவர வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து விலகினார் ஆர்.கே.ராகவன்

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து இருந்தது. அதன் தலைவராக சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் இருந்து வந்தார். அவர், உடல்நிலை சரியில்லை என்பதால், சிறப்புப் புலனாய்வு குழுவில் இருந்து விலக அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுபோல, நாக்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள கே.வெங்கடேசன், தன்னை சிறப்புப் புலனாய்வு குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து முழுவதுமாக விடுவித்து, போலீஸ் கமிஷனர் பணியை முழுநேரமும் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.  அவரும் விடுவிக்கப்பட்டார்.

Raghavan

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  அந்த மனு விசாரணைக்கு வந்தது. அவர்கள் விசாரணையின் முடிவில், தலைவர் பதவியில் இருந்து ஆர்.கே.ராகவன் விலக அனுமதி அளித்தனர். சிறப்பு புலனாய்வு குழுவின் செயல்பாடுகளை அவ்வப்போது மேற்பார்வையிட்டு, 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யுமாறு குழுவின் உறுப்பினர் ஏ.கே.மல்கோத்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close