Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..!

modi

தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 'என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்' என தமிழில் ட்வீட் செய்துள்ளார் மோடி.

மேலும், கேரளா, அஸ்ஸாம் மற்றும் ஒடிசா மாநில மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். கேரளாவில் இன்று விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மக்களுக்கும் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார். கிறிஸ்துவ மக்கள் இன்று 'புனித வெள்ளி' தினத்தை கொண்டாடுகின்றனர். அதுகுறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 'ஏசு கிறிஸ்துவின் சேவை மற்றும் தியாகத்தை நாம் நினைவு கொள்ள வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close