Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் வயதான கைதிக்கு விடுதலை!

இந்தியாவின் மிகவும் வயதான கைதிக்கு பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று விடுதலை அளித்துள்ளது உத்திரப் பிரதேச அரசு.

கைதி

 

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் செளதி யாதவ். 108 வயதான செளதி யாதவ் நேற்று கோரக்பூர் சிறையிலிருந்து விடுதலையானார். உத்திரப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நாயக்கின் அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு உட்பட்டு யாதவ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1979-ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 1982-ம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2003-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கும் யாதவுக்கு உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசின் போது 2012-ம் ஆண்டு விடுதலை அளிப்பதற்கான கோரிக்க ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட விடுதலை அரசாணையினைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் தன் குடும்பத்தைச் சந்தித்த செளதி யாதவ், ‘இவ்வளவு காலம் எனது குடும்பத்தை இழந்துள்ளேன். எனது விடுதலைக்காக அவர்கள் முயலாவிட்டால் சிறையிலேயே இறந்திருப்பேன்’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close