Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்விக்கு பதிலாக கற்களை திணிக்கிறார்கள், பா.ஜ.க தலைவர் கருத்து!

காஷ்மீரில் நிகழும் வன்முறை சம்பவங்களுக்கு ஃபருக் அப்துல்லாவையும் காங்கிரசையும் குற்றம்சாட்டியுள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா. சமீபத்தில் நடந்து இடைத்தேர்தல் வன்முறை சம்பவங்களை கண்டித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் வாக்குபதிவின் போது வன்முறை வெடித்தது. 7 சதவீத அளவுக்கே வாக்குப்பதிவு பதிவாகியது. இதையடுத்து நேற்று மறுவாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. நேற்று நடந்த வாக்குபதிவின் போதும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்கு ஃபருக் அப்துல்லாவையும் காங்கிரசையும் சாடியுள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா.' காஷ்மீரில் இத்தனை ஆண்டுகள் ஆண்ட ஃபருக் அப்துல்லாவும், காங்கிரசும் அமைதியை நிலைநாட்ட தவறிவிட்டனர். இளைஞர்கள் கையில் கல்விக்கு பதிலாக அவர் கற்களையே திணிக்கின்றனர்' என விமர்சித்துள்ளார். 

மேலும், 'ஃபருக் அப்துல்லாவுக்கு வயதாகிவிட்டதால் அவர் ஒய்வு எடுப்பதே நல்லது' எனவும் அவர் கூறியுள்ளார். இடைத்தேர்தல் வன்முறைகளை குறித்து,'பா.ஜ.க வாக்களிப்பதற்கு அமைதியான சூழலை அமைத்து தர தவறிவிவிட்டது,' என ஃபருக் அப்துல்லா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close