Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல் வீச்சில் இருந்து தப்பிக்க ராணுவ ஜீப்பில் கட்டப்பட்ட காஷ்மீர் இளைஞர்!

காஷ்மீரில் ஸ்ரீநகர் தொகுதியில் மக்களவை இடைதேர்தல் நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்பட்டது. இளைஞர்கள் சிலர் ராணுவ வாகனத்தின் மீது கல் எறிந்து தாக்கியுள்ளனர். கல் எறிந்து தாக்கிய இளைஞர் ஒருவரை ராணுவத்தினர் பிடித்து வாகனத்தின் முகப்பில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவரை கேடயமாகப் பயன்படுத்தி ஜீப்பை ஓட்டிச் சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பட்கம் மாவட்டத்தில் சதுரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வீடியோவால் அதிர்ச்சியடைந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா, ''வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பின் விசாரணைக்கு உத்தரவிடப்படும்'' என தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் பலியானார்கள். இதனால், இணையம் தடை செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமைதான் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வைரல் ஆனது. 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close