Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தெற்காசிய செயற்கைகோள்' இஸ்ரோவின் அடுத்த அதிரடி: பாகிஸ்தான் ஆப்சென்ட்!

தெற்காசிய நாடுகளுக்கான, செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

ISRO


பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள்மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவருகிறது, இஸ்ரோ. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி அசத்தியது. இந்த நிலையில், தெற்கு ஆசிய நாடுகளுக்காக, தெற்காசிய செயற்கைக்கோளை, இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.


ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து, வரும் மே 5-ம் தேதி, இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும். GSAT-9 என்ற இந்த செயற்கைக்கோள்,  GSLV-09 ராக்கெட்மூலம் விண்ணில் செலுத்தப்படும்.  இதன் மொத்த எடை  2,195 கிலோ ஆகும். இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம், 12 ஆண்டுகள்.


தெற்காசிய நாடுகளின் தொலைத்தொடர்புப் பயன்பாடுகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும். ஆனால், இந்தத் திட்டத்தில் பாகிஸ்தான் மட்டும் இல்லை. இதில் இணைய விருப்பம் இல்லை என பாகிஸ்தான் கூறிவிட்டதாம்.


 2014-ம் ஆண்டில், நேபாளில் நடந்த சார்க் மாநாட்டில், தெற்கு ஆசிய செயற்கைகோளை இஸ்ரோ, விண்ணில் செலுத்தும் என்று கூறப்பட்டது. அதன்படி, இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close