Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை : ரூ.100 செலுத்தியவர் 25 லட்சம் அள்ளினார்!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் பரிசுத்  திட்டத்தின் கீழ், ரூ.100 பணப் பரிவர்த்தனை மேற்கொண்டவருக்கு, 25 லட்ச ரூபாய் பரிசு விழுந்தது. 

நாட்டில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை  ஊக்கப்படுத்தும் வகையில் 'Lucky Grahak Yojana' என்ற திட்டம் பொதுமக்களுக்காகவும், 'Digi Dhan Vyapar Yojana'  திட்டம், வியாபாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு, மொத்தம் 258 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. குலுக்கல் முறையில் பரிசுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பொதுமக்களுக்கான திட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஷ்ரதா என்ற இன்ஜினீயரிங் மாணவிக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது. இரண்டாவது பரிசு, 50 லட்சத்தை குஜராத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஹர்திக் குமாரும், மூன்றாவது பரிசான 25 லட்சத்தை உத்தரகாண்ட்டைச் சேர்ந்த பாரத்சிங்கும் வென்றனர். இவர், 'ருப்யா' கார்டு வழியாக வெறும் 100 மட்டுமே பணப் பரிவர்த்தனை மேற்கொண்டார். 

வியாபாரிகளுக்கான பணப் பரிவர்த்தனையில், சென்னை ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸைச் சேர்ந்த ஆனந்தபத்மநாபன் ரூ. 50 லட்சம் வென்றார். இவர், 300 ரூபாய் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஏற்றுக்கொண்டிருந்தார். தனக்கு விழுந்த பரிசுத் தொகையை கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு  ஆனந்தபத்மநாபன் அளித்தார். இந்தப் பரிசுத் திட்டம் தற்போது நிறைவடைந்தது. நாடு முழுவதும் 16 லட்சம் பேர் பரிசுகளை வென்றனர். நேற்று டெல்லியில் நடந்த  விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பரிசுத் தொகை வழங்கினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close