Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மின்னணு வாக்கு இயந்திரத்தை இப்படி எல்லாம் முடக்கலாம்' : கெஜ்ரிவால் அடுக்கும் காரணங்கள்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்திடம்  எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

Aravind Kejiriwal


இதையடுத்து, 'மே மாதம் முதல் வாரத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள்மூலம் அரசியல் கட்சிகள் நிரூபிக்கலாம்' என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால் விடுத்தது. 

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நான் ஐ.ஐ.டி-யில் படித்த, இன்ஜினீயர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, எப்படியெல்லாம் முடக்க முடியும், என்பதற்கு 10 காரணங்களை என்னால் கூற முடியும்.  மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிப்கள் மூலமாக, வைரஸ்களையோ, வேறு தொழில்நுட்பக் கோளாறுகளையோ ஏற்படுத்த முடியும். 

பஞ்சாப், கோவா தேர்தலில் தோற்றதற்காக நான் இதைக் கூறவில்லை. டெல்லி உள்ளாட்சித் தேர்தலில், ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் கூட, நாங்கள் இதே கருத்தை வலியுறுத்துவோம். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றால்கூட நாங்கள் மீண்டும் வாக்குச்சீட்டுமூலம் மறு தேர்தலுக்குச் செல்ல தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close