Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அப்பாவி காஷ்மீர் மக்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தது உண்டா?': சேவாக், கம்பீருக்கு எம்.எல்.ஏ கேள்வி

காஷ்மீர் ஸ்ரீநகரில், சமீபத்தில் தேர்தல் நடந்துவந்த சமயம், ஓட்டுப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் ராணுவ வீரர்களை ஜிகாதிகள் சிலர் தொடர்ந்து தாக்கிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. அந்த வீடியோ காட்சியில், இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வீரர்கள் கௌதம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.


இதுகுறித்து கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’நம் வீரர்கள்மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். காஷ்மீரைப் பிரிக்க நினைப்பவர்கள் வெளியேறுங்கள். காஷ்மீர் எங்களுடையதே’ என ஆவேசமாகக் கூறினார்.


அதேபோல வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நம் வீரர்களை இவ்வாறு செய்திருக்கக்கூடாது. இந்தக் கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், காஷ்மீர் சுயேட்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத், "காஷ்மீரிகளை  நாட்டை விட்டு வெளியேறச் சொல்லும் கிரிக்கெட் வீரர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது இந்தியா, பாகிஸ்தான் மோதும் இன்டர்நேஷனல் கிரிக்கெட் மேட்ச் இல்லை. தங்களது அங்கீகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் மோதல் இது.


ராணுவ வீரர்கள்மீது கல் வீசப்பட்டதற்கு வருத்தப்படுவர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் ராணுவத்தால் காயமடைந்துள்ளதற்கு குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் கையில் கற்கள் இல்லை. பேட் மற்றும் பால்தான் உள்ளது. அவர்கள் என்ன தவறுசெய்தார்கள். ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வீரர்கள், இங்கு அப்பாவி மக்கள் தொடர்ந்து ராணுவத்தால் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனரா?


அந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் காஷ்மீர் வந்து, ராணுவத்தால் கண்பார்வை பறிபோன நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பார்த்துவிட்டுப் பேசட்டும்" என்று கூறியுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close