Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்குத்தான் முன்னுரிமை.. மோடி கூறும் காரணங்கள்!

'பெண்கள், திருமணத்துக்குப் பிறகு பாஸ்போர்ட்டில் கணவர் பெயரைச் சேர்ப்பது அவர்களது விருப்பம், பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு பா.ஜ.க அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில்  அரசு செயல்பட்டுவருகிறது என்று தெரிவித்துள்ளார்.

women passport name change
 

இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவுக் கூட்டம்,  மும்பையில் அண்மையில் நடைபெற்றது. டெல்லியில் இருந்து, காணொலிக் காட்சி மூலம் அந்தக் கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

அந்த உரையில், ”பெண்களுக்கு பா.ஜ.க அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டுவருகிறது. பல்வேறு திட்டங்களை மத்திய பெண்களின் நலனுக்காக அறிமுகம் செய்துள்ளது.  பெண்கள், திருமணத்துக்கு முன்னர் பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயரை இணைத்துப் பயன்படுத்துவார்கள். திருமணத்துக்குப் பிறகு கணவரின் பெயரை இணைத்துப் பெயர் மாற்றம் செய்துகொள்வது வழக்கம். இனி, அவ்வாறு பெயர் மாற்றம் செய்துகொள்வது அவர்கள் விருப்பம். திருமணத்துக்குப் பிறகு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

பெண்களின் நலனில் அக்கறை காட்டும் பா.ஜ.க அரசு, பேறுகால விடுப்பு மூன்று மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக அதிகரித்தது. மருத்துவமனையில் குழந்தை பெறும் பெண்களுக்கு, ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறது. ’உஜ்வாலா’ என்னும் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு, சமையல் வகுப்பு  கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை பெண்களின் நலனுக்காக பா.ஜ.க அரசு அறிவித்துவருகிறது” இவ்வாறு மோடி பேசினார். 

பெண்கள் பாஸ்போர்ட்டில் திருமணத்துக்குப் பிறகு பெயர் மாற்றம் செய்யவேண்டியது இல்லை என்று மோடி அறிவித்துள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ’பெண்கள், பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்வது காட்டாயம் இல்லை என்பது ஏற்கெனவே இருக்கும் நடைமுறைதான். அதை ஏன் மீண்டும் அறிவிக்க வேண்டும்’ என்று சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close