Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நண்பனின் செல்ஃபி மோகத்தால் பலியான நான்கு பேர்! கொல்கத்தாவில் நிகழ்ந்த சோகம்

கொல்கத்தாவில், ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கீழே விழுந்த நபரைக் காப்பாற்ற முயன்ற நான்கு நண்பர்களும் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

selfie ended four life
 

கொல்கத்தாவின் தும்தும் பகுதியைச் சேர்ந்தவர் தாரக்நாத் மாகல். இவர், தன் நண்பர்கள் சுமித்குமார், சஞ்சீவ் போலே, காஜல் சாகா மற்றும் சந்தன் போலே ஆகியோருடன்  ஹௌரா அருகில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுள்ளனர். தரிசனம் முடிந்து, கடந்த வியாழன் மாலை ரயிலில் பயணம்செய்தபோது, ஐந்து பேரும் ரயிலின் கதவருகே நின்று பயணம் செய்தனர். 

தாரக்நாத் மாகல், ஓடும் ரயிலில் தொங்கியபடி தன் நான்கு நண்பர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அவர், திடீரென கால் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்தவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான்கு நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக ரயிலில் இருந்து கீழே குதித்தனர். கீழே குதிப்பதற்கு முன்னர், நான்கு பேரும் எதிர்ப்பக்கத்தில் வந்த மற்றொரு ரயிலைக் கவனிக்கவில்லை. வேகமாக வந்த அந்த ரயில் நான்கு பேர் மீதும் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர். செல்ஃபி எடுக்க முயன்றவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஒருவரின் செல்ஃபி மோகத்தால், நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம், ஹௌரா பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close