Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரா' உளவாளிகள் என மூன்று பேரை கைதுசெய்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றம் சாட்டி, அவர்களைக் கைதுசெய்துள்ளது, பாகிஸ்தான் சட்டம்- ஒழுங்குதுறை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான அசாத் காஷ்மீரில், நேற்று சந்தேகத்துக்குரிய மூன்று நபர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைதுசெய்தனர். இவர்களை, இந்திய உளவு அமைப்பான 'ரா' உளவாளிகள் எனக் குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான்.

கைதுசெய்யபட்ட முகமது கலீல், இம்தியாஸ், ரஷீத் மூவரும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், காவல் நிலையத்துக்கு குண்டு வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும், இந்திய அதிகாரிகளைச் சந்திக்க, பல முறை அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ராவல்கோட்டில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் யாதவை இந்திய உளவாளி என குற்றம் சாட்டி, தூக்குத் தண்டனை வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். இதையடுத்து, இந்தியாவின் தரப்பில் பலத்த கண்டனங்கள் எழுந்தன. மேலும், பாகிஸ்தானிடம் குல்பூஷனுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் நகல், குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருந்தது, இந்தியா. இந்த நிலையில், மேலும் மூன்று பேரை 'ரா' உளவாளிகள் என பாகிஸ்தான் கைதுசெய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close