Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடக்கும் முறைகேடுகளை சரி செய்யும் வரை டெல்லி மாநகராட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம். 

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால், 'வாக்குப்பதிவு இயந்திரங்களில் எளிதாக முறைகேடுகள் செய்துவிட முடியும், வேண்டுமானால் தேர்தல் ஆணையம் எங்களிடம் இயந்திரத்தை தந்து பார்க்கட்டும்' என கூறியிருந்தார். இதையடுத்து நடக்கவிருக்கும் டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்குமாறு அவர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். கெஜ்ரிவாலின் கோரிக்கைகளை ஏற்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி டெல்லி மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகளை தடுக்கும்பட்சத்தில் ஆம் ஆத்மி நிச்சயம் வெற்றிபெறும் என கூறியிருந்தார் கெஜ்ரிவால்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close