Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாயாவதியுடன் கைகோக்கிறார் அகிலேஷ்! இதுதான் காரணம்

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டியக்கத்தில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதியுடன் அவர் கூட்டணி அமைக்கவுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சியமைத்த பா.ஜ.க தொடர்ந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சாமானிய மக்களின் விருப்பத்துக்கு எதிரான இறைச்சி கூடங்கள் தடை, ஆன்டி-ரோமியோ படை என யோகி ஆதித்யநாத் அரசின் செயல்கள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து , பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி,' பா.ஜ.கவின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்தார். மாயாவதியின் அழைப்புக்கு அகிலேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,' பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை வரவேற்கிறேன். இக்கூட்டியக்கத்தில் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளேன்' என கூறியுள்ளார்.

மேலும், மக்கள் விரோத அரசாக ஆதித்யநாத் அரசு செயல்படுவதாகவும், இந்துத்துவா கொள்கைகளில் மட்டுமே அக்கறை செலுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close