Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு , பாஜகவினர் சட்டசபையில் அமளி

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 12 சதவீதமாக அதிகரிக்க கோரிய தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.கவினர் அமளியில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 12 சதவீதம் அதிகரிக்க இன்று சட்டசபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. மேலும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டையும் பத்து சதவீதம் அதிகரிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு ஆதரவான இத்தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, எம்.எல்.ஏக்கள் ஐந்து பேரை இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் மதுசூதன சாரி உத்தரவிட்டார்.

பா.ஜ.க அவைத்தலைவர் கிஷன் ரெட்டி , 'தெலுங்கானா அரசு தற்போது வாக்கு வங்கி அரசியலில் தான் கவனம் செலுத்தி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.கவின் வெற்றியை கண்டு தெலுங்கானா முதலமைச்சர் பயப்படுகிறார்' என கூறியுள்ளார். இதனிடையே, இடஒதுக்கீடு குறித்து வெங்கய்ய நாயுடுவும் விமர்சித்திருந்தார். 'மத ரீதியிலான இட ஒதுக்கீடுகளை பா.ஜ.க தொடர்ந்து எதிர்க்கும். இது மற்றுமொரு பாகிஸ்தானை உருவாக்கவே வழிவகுக்கும்' என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close