Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் பதற்றம்: CRPF வாகனம் மீது குண்டுவீச்சு

Kashmir

ஶ்ரீகரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்றுக் கொண்டிருந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு & காஷ்மீர், ஶ்ரீநகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வன்முறை வெடித்தது. தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எட்டு பேர் பலியானார்கள். அன்று முதல் பாதுகாப்புப் படையினர் - போராட்டக்காரர்கள் இடையே தொடர்ந்து சண்டைகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஶ்ரீநகரில் உள்ள ரெய்னாவரி பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்றுக் கொண்டிருந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது.  இந்த குண்டுவீச்சில் சிஆர்பிஎஃப் வீரர்கள் யாருக்கும் காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவால், ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

படம்: நன்றி ANI

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close