Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாதவ் தூக்கு தண்டனை எதிரொலி: பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு!

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவைத்துள்ளது மத்திய அரசு. குல்பூஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவை 'ரா' அமைப்பின் உளவாளி என குற்றம்சாட்டி கைது செய்தது பாகிஸ்தான். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்தியாவின் தரப்பில் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜாதவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது திட்டமிட்ட கொலையாக கருதப்படும், இரு நாட்டு உறவுகளுக்குள்ளும் கடுமையான பாதிப்புகள் உண்டாகும் என எச்சரித்திருந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். இதையடுத்து, ஜாதவை சந்திக்க தூதரக அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டது.

தற்போது, இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தானியர்களுக்கு விசா தருவதை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு. மேலும், மருத்துவ சிகிச்சைகளுக்காக விசா கேட்டவர்களின் விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜாதவ் வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close