Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏடிஎம் சேவையில் 100% அந்நிய நேரடி முதலீடு

ஏடிஎம் இயந்திரங்களின் பராமரிப்பு பணிகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பது, பணம் நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றில் சர்வதேச நிறுவனங்களையும் ஈடுபடுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 100% அந்நிய நேரடி முதலீட்டு யோசனை நிதியமைச்சகத்தின் தரப்பில் முன்வைக்கபட்டுள்ளன.

இதுகுறித்து, உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு தணிக்கைச் சான்றிதழ் கோரப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் அனுமதி தந்த பின்னர் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கும் என கூறப்படுகிறது. இதுவரை ஏடிஎம் பணம் நிரப்பும் சேவையில், எஸ்.ஐ.எஸ், சி.எம்.எஸ், லாஜி-கேஷ் உள்ளிட்ட சில நிறுவனங்களே ஈடுபட்டு வருகின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close