Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஸ்வரூபம் எடுக்கும் 'முத்தலாக்' விவகாரம்: கவலை தெரிவித்த மோடி..!

'முத்தலாக்' முறையால், முஸ்லிம் பெண்கள் சங்கடங்களை எதிர்கொள்கின்றனர் எனக் கூறியுள்ளார், பிரதமர் மோடி. பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு மாநாடு ஒடிசாவில் நடைபெற்றது. ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ.கவை பலப்படுத்துவதுகுறித்து அவர் நேற்று உரையாற்றினார். இந்த நிலையில், இன்றைய மாநாட்டில் அவர் முத்தலாக் முறைகுறித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 'முத்தலாக் முறையால் இஸ்லாமியப் பெண்கள் சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள். மேலும், புதிய இந்தியாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கையில், பெண்கள் பாதிக்கப்படுவது கவலையளிப்பதாக உள்ளது', எனக் கூறியுள்ளார். முத்தலாக் முறையின் பாதிப்புகள்குறித்து மாவட்ட வாரியாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அண்மையில் தேவையற்ற பேச்சுக்களால் தொடர் சர்ச்சைகளில் சிக்கிவரும் பா.ஜ.க-வினருக்கும் அவர் அறிவுரை கூறியுள்ளார். 'சர்ச்சைக்குரிய பேச்சுக்களை விடுத்து, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். சமீபத்திய தேர்தல் வெற்றிகளைக் கண்டு அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close