Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூரத்தில் மோடி சாலை பேரணி, மக்கள் உற்சாக வரவேற்பு!

குஜராத் மாநிலம் சூரத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, சூரத் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 11 கி.மீ தொலைவிலான சாலைப் பேரணியில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

ஒடிசாவில், இரண்டு நாள் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, சூரத் வருகை புரிந்தார். சூரத்தில் அவர் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளார். சூரத் வந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 11 கி.மீ தொலைவிலான மோடியின் சாலைப் பேரணிக்கு, இருபுறங்களிலும் மக்கள் கையசைத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் பல்லாயிரம் இளைஞர்கள் மோடியின் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். தங்கள் செல்ஃபோன்களின் டார்ச் விளக்கைக் காண்பித்தும் மக்கள் மோடியை வரவேற்றனர்.

இந்தப் பேரணி நடைபெறும் சாலை நெடுகிலும் பா.ஜ.கவின் பேனர்களும், மோடி அரசின் சாதனைகளும், அவரின் உருவப்படங்களும் அச்சடித்து வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தாத்ரா நகர், ஹாவேலி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, மத்திய அரசின் நலத் திட்டங்கள்குறித்து உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close