Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் ஜி.டி.பி 7.2 சதவிகிதமாக இருக்கும் - உலக வங்கி

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

Econamic growth


இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதத்தில் இருந்து அதிகரித்து, இந்த ஆண்டு 7.2  சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2019-ம் ஆண்டு, இந்தியாவின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். அதாவது, 2019-ம் ஆண்டில், இந்தியாவின் வளர்ச்சி 7.7 சதவிகிதமாக இருக்கும். ஜி.எஸ்.டி இந்தியாவின் வளர்ச்சியில், முக்கிய பங்காற்றும்.


உலக அளவில், தெற்கு ஆசியாதான் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் பகுதி. 2016-ம் ஆண்டு 6.7 சதவிகிதமாக இருந்த அதன் வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 6.8 சதவிகிதமாகவும், 2018-ம் ஆண்டு 7.1 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close