Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில், இளைஞர் ஒருவர் ஜீப்பில் கட்டப்பட்ட விவகாரம்: போலீஸ் வழக்குப்பதிவு!

காஷ்மீர் ஸ்ரீநகர் தொகுதியில், கடந்த 9-ம் தேதி மக்களவை இடைதேர்தல் நடைபெற்றபோது, வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு தொடர்ந்து பதற்றநிலை உருவானது. குறிப்பாக, இன்டர்நெட் சேவை முழுவதும் ரத்துசெய்யப்பட்டு, பிறகு கடந்த 13-ம் தேதி இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்கப்பட்டது.

Kashmir: Man tied to Jeep


இளைஞர்கள் சிலர், ராணுவ வாகனத்தின் மீது கல் எறிந்து தாக்கியுள்ளனர். கல் எறிந்து தாக்கிய இளைஞர்களில் ஒருவரை ராணுவத்தினர் பிடித்து, வாகனத்தின் முகப்பில் கட்டிவைத்துள்ளனர். பின்னர், அவரை கேடயமாகப் பயன்படுத்தி, ஜீப்பை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகி, சர்ச்சையைக் கிளப்பியது.


 இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, அங்குள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன. இந்த நிலையில்,  சம்பவம்குறித்து,  அங்கு பீர்வா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close