Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழைய ஃப்ரிட்ஜ், கார்களை அரசே நல்ல விலைக்கு வாங்கிக்கொள்கிறதாம்!

மக்கள் பயன்படுத்திய பழைய ஃப்ரிட்ஜ், கார்களை மத்திய அரசே நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கான மையங்களும் விரைவில் திறக்கப்படுமென நிதி ஆயோக் உறுப்பினர் விஜய் குமார் சரஸ்வத் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் பழைய ஃபிரிட்ஜ், கார் போன்றவற்றை விற்பதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாலும், வழியில்லாமல் குறைந்த விலைக்கு விற்பதாலும் அரசே நல்ல விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே மத்திய அரசே புதிய கொள்கைகளை வகுத்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் விஜய் குமார் சரஸ்வத் தெரிவித்துள்ளார். 

உலோக மறுசுழற்சி கொள்கையினை மத்திய உருக்குத்துறையும், நிதி ஆயோக்கும் இணைந்து கொண்டுவர உள்ளதால் மக்களுக்கு கூடிய சீக்கிரமே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசே இந்தியா முழுவதும் அரசின் அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், அங்கு மக்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய ஃப்ரிட்ஜ், கார் போன்ற பொருள்களை நல்ல விலைக்கு விற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close