Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹிந்தி எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்?.. குடியரசு தலைவர் அளித்த ஒப்புதல் இதுதான்

ஹிந்தி எழுதப் படிக்கத் தெரிந்த குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் ஹிந்தியில்தான் உரையாற்ற வேண்டும் என்னும் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல் அளித்துள்ளார்.

Pranab Mukherjee
 

நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ மொழிகள் பற்றி பரிந்துரைகள் அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த ஆறு ஆண்டுகளாக ஹிந்தி பிரபலப்படுத்த 117 பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை நிராகரித்த குடியரசுத் தலைவர், ஒரு சில பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பரிந்துரைகள் :

* ஹிந்தி தெரிந்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இனி ஹிந்தியில்தான் உரையாற்ற வேண்டும். குடியரசுத் தலைவரும் ஹிந்தியில் தான் உரையாற்ற வேண்டும். 

* ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளில் ஹிந்தி பயன்படுத்த வேண்டும். 

* ஏர் இந்தியா விமானங்களின் பயணிகள் படிக்க ஹிந்தி புத்தகங்கள், நாளிதழ்கள் வைக்க வேண்டும்.
 
குடியரசுத் தலைவர் நிராகரித்த பரிந்துரைகள் :

* மத்திய அரசு பணியிடங்களில் அமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தப்பட்ச ஹிந்தி மொழி அறிவு இருக்க வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிப்பு.

* பொதுத்துறை நிறுவனங்கள் தகவல் பரிமாற்றங்களை ஹிந்தியில்தான் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

* சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை மாநில அரசுகளின் ஒப்புதல் இருந்தால் செயல்படுத்தலாம் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. நாடாளுமன்றத்தில் ஹிந்தியில் பேச வேண்டும் என்ற உத்தரவால், அடுத்த குடியரசுத் தலைவர் ஹிந்தியில் மட்டுமே உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close