Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபரிமலையில் பெண்களா? ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு!

சபரிமலையில் பெண்கள் சிலர் சுவாமி தரிசனம் செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவது கடும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.

சபரிமலை

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு பல காலமாகவே தடை இருந்து வருகிறது. தற்போது, சபரிமலையில் சுவாமி சன்னதிக்கு அருகே பெண்கள் தரிசனம் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மிக முக்கியமான பிரமுகர்கள் என எவருக்குமே இதற்கான அனுமதி கிடையாது என்றபோது கொல்லத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் தன் குடும்பத்தினரை சிறப்பு அனுமதியுடன் அழைத்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆய்வுக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close