Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மத்திய அரசால் என்னை அமைதிப்படுத்த முடியாது...' ப.சிதம்பரம் பதிலடி!

P.Chidambaram

'கார்த்தி சிதம்பரத்தை குறி வைப்பதன் மூலம் மத்திய அரசு நான் பேசுவதை நிறுத்திவிட முடியாது' என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார். 

அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

ராஜஸ்தானில், ஹிகித்சா ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம், ஆம்புலன்சுகளை முறைகேடாக இயக்கியதாக, அதன் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை தற்போது நடத்தி வருகிறது. குறிப்பாக, வாசன் ஹெல்த்கேர் மூலம் நடந்த கறுப்புப் பண பரிவர்த்தனையில், கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. 

இந்நிலையில், 45 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் கார்த்தி சிதம்பரத்தின் தந்தையுமான ப.சிதம்பரம், 'கார்த்தி சிதம்பரத்தை குறி வைப்பதன் மூலம் மத்திய அரசு என் எழுத்தையோ பேச்சையோ நிறுத்திவிட முடியாது. இதுவரை கார்த்தி சிதம்பரத்துக்கு எந்த நோட்டிஸும் வரவில்லை. எதாவது அதிகாரபூர்வ நோட்டீஸ் வரும் பட்சத்தில், அதற்கு உரிய பதிலளிப்போம்' என்று அவர் பேசியுள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close