Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்னாப் கோஸ்வாமிக்கு ஊடக நிறுவனம் மிரட்டல்...!

டைம்ஸ் நவ் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றி இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் அர்னாப் கோஸ்வாமி. அவர், சில மாதங்களுக்கு முன்னர் சொந்தமாக ஒரு ஊடக நிறுவனத்தை தொடங்க உள்ளதாகக் கூறி, டைம்ஸ் நவ் சேனலில் இருந்து வெளியேறினார். அவர், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருக்கும்போது 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' (Nation wants to know) என்ற வாக்கியத்தை அவரது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து உபயோகித்து வந்தார். தற்போது அர்னாப் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதால், இந்த வாக்கியத்தை தொடர்ந்து பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த விஷயம் பற்றி அர்னாப் கோஸ்வாமி ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'மக்களே, எனக்கு சட்ட ரீதியில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ஊடக நிறுவனம், 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற வாக்கியத்தை நான் பயன்படுத்தினால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று தெரிவித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற வாக்கியம் அவர்களுக்கு உரியது என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு நான் ஒன்றைத் தான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். எந்தவித நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். அதைக் கண்டு எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற வாக்கியம் அனைவருக்கும் உரியது.' என்று பேசியுள்ளார்.

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close