Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகப் போகிறது...'- பிரதமர் மோடி பேச்சு

தன் சொந்த மாநிலமான குஜராத்துக்குப் பயணம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில நாள்களாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றி வருகிறார். 

அப்போது பேசிய அவர், 'என் தலைமையிலான அரசு தொடர்ந்து விவசாயத் துறையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. விவசாயத்தில் புதுவித தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதைப் பலப்படுத்தி வருகின்றோம். இந்த நடவடிக்கையின் மூலம், வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது.' என்று பேசினார்.

அவர் மேலும், 'சுத்தமான தண்ணீரால் ஆரோக்கியமான ஒரு இந்தியாவை நாம் உருவாக்க முடியும்' என்றும் கூறியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், மோடி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கியும் கூட்டங்களில் கலந்துகொண்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close