Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்கு அரசியல் தெரியாது! சுப்பிரமணியன் சுவாமி தடாலடி பேட்டி

'நடிகர் ரஜினிகாந்த்துக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது' என்று பா.ஜ.க மாநிலங்களவை எம்பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். 

Subramaniya swamy
 

வேலூர் கலவையை அடுத்து, காஞ்சிபுரம் சங்கரமடத்துக்குச் சுப்பிரமணியன் சுவாமி இன்று சென்றார்.  அங்கு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நடிகர்கள்தான்.  நடிகர் ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க வாய்ப்பில்லை” என்று  கூறியுள்ளார்.

தமிழகத்தில், பா.ஜ.க தனது செல்வாக்கை அதிகரிக்க நடிகர் ரஜினிகாந்த்தை அணுக முயல்வதாக, பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. இதை, பா.ஜ.க-வினர் மறுத்துவரும் நிலையில், 'ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது' என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close