Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்கு உடை கட்டுப்பாடு - டெல்லி ஐஐடி அதிரடி நோட்டீஸ்!

டெல்லி ஐஐடி-யில் நடக்கும் விழா ஒன்றுக்கு, மாணவிகள் உடை கட்டுப்பாட்டுடன் வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது, கல்லூரி நிர்வாகம்.

delhi iit

டெல்லியில் உள்ள ஐஐடி-யில் ஆண்டுதோறும் விடுதி மாணவர்களுக்கான விழா நடைபெறும். வரும் 20-ம் தேதி நடக்கும் இந்த விழாவுக்கு பல விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த விழாவுக்கு, பெண்கள் நாகரிகமான உடையில் வர வேண்டும் எனக் கூறியுள்ளது நிர்வாகம்.

இதுகுறித்து விடுதி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில்,' 20-ம் தேதி விழா நடைபெற உள்ளது. விடுதி மாணவிகள், முழு உடலையும் மறைக்கும் நாகரிகமான ஆடைகள் அணிந்து வர வேன்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, நிர்வாகத்தின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை முன்வைத்துவருகின்றனர் நெட்டிசன்ஸ். இத்தனை நாட்கள் இது போன்ற கட்டுபாடுகள் வாய்மொழியாக மட்டுமே கூறப்பட்டுவந்த நிலையில், இந்த முறை எழுத்துபூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close