Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்கு பதில் ட்வீட் செய்த சச்சின் டெண்டுல்கர்!

 2012-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபோது, 100 கோடி இதயங்கள் நொறுங்கின. அவற்றை ஒன்று சேர்க்க யாராலும் முடியாது. ஆனால், சச்சினை மீண்டும் தரிசிக்க, சச்சினை மீண்டும் லயிக்க, சச்சினை மீண்டும் திரையில் பார்க்க, அதுவும் வெள்ளித்திரையில் பார்க்க இன்னொரு வாய்ப்பு, மே மாதம் 26-ம் தேதி வெளியாகப்போகும் 'சச்சின்' பயோகிராஃபியின் ட்ரெய்லர் சில நாள்களுக்கு முன்னர் வெளியானது. தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்த நிலையில், படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், 'அன்புக்குரிய சச்சின், 'சச்சின்' திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்' என்று பதிவுசெய்துள்ளார்.

 

இதையடுத்து, இந்த ட்வீட்டுக்கு சச்சின் டெண்டுல்கர், 'நன்றி தலைவா. உங்களுக்கு இந்தத் திரைப்படம் தமிழில் பிடிக்கும் என்று நம்புகிறேன்' என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close