Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிபதியிடம் கதறிய இடைத்தரகர் சுகேஷ் சந்தர்

சிறையில் போலீஸார், தன்னைத் துன்புறுத்துவதாக, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 

Sukesh Sunder

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாகப் பிரிந்து அவர்கள் மல்லுக்கட்ட, தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்க இரண்டு கட்சிகளும், பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன. இந்நிலையில், டி.டி.வி.தினகரன் சார்பில் இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறி இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகேஷ் சந்தரை காவலில் எடுத்து விசாரித்த போலீஸாரிடம், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.  இந்நிலையில், சிறையில் போலீஸார் தன்னைத் துன்புறுத்துவதாக தன் வழக்கறிஞர் மூலம் சுகேஷ், தீஷ் ஹசாரே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சிறையில், கேமரா வைக்க சுகேஷ் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக டெல்லி குற்றவியல் போலீஸார் நாளைக்குள் பதிலளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close