Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை வருகிறது டெல்லி போலீஸ்! தினகரனுக்கு முற்றும் நெருக்கடி

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். 

Dinakaran


இந்த வழக்கு தொடர்பாக, சுகேஷ் சந்தர்  என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பான எப்ஐஆர் நகலையும் நேற்று வெளியிட்டது போலீஸ்.

இதுகுறித்து தினகரனிடம் விசாரணை நடத்த, ஏ.சி.பி. சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நேற்று சென்னை வருவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அவர்கள் இன்று காலை வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, டெல்லி போலீஸார் இன்று மாலை சென்னை புறப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்படுவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்துகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close