Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காரில் சைரன் பயன்படுத்த பிரதமருக்குத் தடை - மத்திய அரசு அதிரடி முடிவு

பிரதமர் உள்ளிட்ட விஐபிகள் யாரும் இனிமேல் சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

beacon


டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, 'இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே 1-ம் தேதி முதல் பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்கள், விஐபி அங்கீகாரம் கொண்ட யாரும் சிகப்பு மற்றும் நீல சைரன்களை காரில் பயன்படுத்தக் கூடாது. இந்த அரசு சாமானிய மக்களுக்கான அரசு. விஐபி கலாசாரத்தை ஒழிப்பதற்காகவே இந்த முடிவு. அவசரத் தேவைகளுக்கு செல்லும் வண்டிகள் சிகப்பு சைரனை பயன்படுத்தலாம்' என்றார்.

 

இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் சிகப்பு நிற சைரன்களை தங்கள் காரில் பயன்படுத்தி வருவது வழக்கம். மேலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நீல நிற சைரன்கள் உள்ள அரசு வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது மே 1-ம் தேதி முதல் விஐபிக்கள் நிலையில் உள்ள யாரும் சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், ஆபத்து காலத்துக்கு பயன்படுத்தப்படும் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் சிகப்பு சைரன்கள் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close