Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!

கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ்  அறிவித்துள்ளார்.

modi
 

உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் வேசக் தினத்துக்கு பாரம்பர்ய விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு வேசக் தினத்தையொட்டி, சர்வதேச மாநாடு நடத்த ஐ.நா சபை முடிவுசெய்துள்ளது.

இலங்கையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில்,  100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியைப் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மோடியின் இரண்டாவது இலங்கைப் பயணம் இது. இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close