Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நில மாஃபியாக்களை அதிரவைக்கும் யோகி ஆதித்யநாத்!

உத்தரப்பிரதேசத்தில், வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுக்கடைகள் செயல்படத் தடை விதித்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Yogi Adityanath
 

உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக பதவியேற்றதில் இருந்து அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் யோகி ஆதித்யநாத். தற்போது, உ.பி முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்படும் மதுக்கடைகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இனி வரும் காலங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ள நில மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 'ஒரு மாதத்துக்குள் அரசுக்குச் சொந்தமான நிலங்களை காலி செய்யாவிட்டால், கடும் நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் ' என கூறியுள்ளார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள அரசு நிலங்களை மீட்க சிறப்பு படையை அமைக்க உத்தரவிட்டுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close