Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரன்ட்

இஸ்லாமிய மதபோதகர் ஷாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரன்டை மும்பை சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை ஷாகிர் நாயக் நடத்தி வந்தார். அவர் இளைஞர்களை மத ரீதியாக பிளவுபடுத்துவதாகவும் தீவிரவாத பாதையில் இளைஞர்கள் செல்லும் வகையில் அவர்களைத் தவறாக வழி நடத்துவதாகவும் ஷாகிர் நாயக் மீது புகார் எழுந்தது.

மேலும், அவருக்கு வெளிநாடுகளில் இருந்து தவறான வழியில் பணம் வருவதாகவும் புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய புலனாய்வு அமைப்பினர் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். கைது நடவடிக்கைகையை தவிர்ப்பதற்காக ஷாகிர் நாயக் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தற்போது மும்பையில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம், ஷாகிர் நாயக்கிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close