Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் தருண் விஜய்யை முற்றுகையிட்ட மாணவர்கள் வெளியேற்றம்

'நாங்கள் தென்னிந்திய கருப்பர்களுடன் ஒன்றாக வாழவில்லையா' என்று அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார் பா.ஜ.க எம்.பி தருண் விஜய். இதற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், தருண் விஜய் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

Tharun Vijay


இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, தருண் விஜய் இன்று அங்கு சென்றிருந்தார். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவர் சென்றிருந்தபோது, மாணவர்கள் தருண் விஜயை முற்றுகையிட்டனர். குறிப்பாக, தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் பணிக்காக அங்கிருந்த போலீஸார், முற்றுகையிட்ட மாணவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். அப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close