Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேர்ள் ஃப்ரெண்டுடன் கோவா செல்ல காசு இல்லாததால், விமான நிலையங்களுக்கு மிரட்டல்: இளைஞர் கைது

சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் உள்ள விமானங்களைக் கடத்துவது தொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்,மும்பை கமிஷனர் அலுவலகத்துக்கு இ-மெயில்மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.  23 பேர் இந்த கடத்தல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது. 

Chennai Airport

இதையடுத்து, மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள்மூலம் மூன்று விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடுமையான சோதனைக்குப் பிறகே, பயணிகள் விமான நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞரை, போலீஸார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு சென்னையில் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் உள்ளார். அந்த கேர்ள் ஃப்ரெண்டை விமானம்மூலம் கோவாவுக்கு அழைத்துச்செல்ல அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், அவரிடம் அதற்கான பணம் இல்லை. இதனால், கேர்ள் ஃப்ரெண்டிடம் உண்மையைக் கூற முடியாமல், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்காக, பெண் பெயரில் போலி இ-மெயில் ஐடி ஆரம்பித்து, அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close